மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில இடங்கள் நாளை (28) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

அதன்படி நாளை அதிகாலை 5 மணி முதல் டாம் வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுகளில் விதிக்கப்பட்ட தனிமைபடுத்தல் உத்தரவு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு 2 இல் உள்ள வேகந்தை மற்றும் ஹுனுபிட்டிய பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தோடு வெள்ளவத்தையில் மயூரா பிளேஸ் மற்றும் ஹல்கவத்தை, பொரளையில் Kalipullawatte, Laksanda Sevana ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்