இயக்கச்சி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்..

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து யாழ்நோக்கி பயணித்த தனியார் பேரூந்து எதிரே பயணித்த வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது சாவகச்சேரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கென்ரர் வாகனம் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் வாகனங்களை செலுத்திய சாரதிகள் இருவரும் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான மெலதிக விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்