முல்லைத்தீவு மாவட்டத்தில் போதிய உணவின்றி கால்நடைகள் உயிரிழக்கும் அபாய நிலை !

முல்லைத்தீவு மாவட்டத்தில் போதிய உணவின்றி கால்நடைகள் உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கால்நடைகளுக்கான உரிய மேச்சல் தரைகள் இன்மையால் மீள்குடியேறிய காலம் முதல் இன்றுவரை தாம் அவதியுறுவதாக பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயம், மீன்பிடி ,மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன காணப்படுகின்றன.
பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் வைத்திருக்கின்ற போதும் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் இன்றுவரை மேய்ச்சல் தரையில்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக வயல் விதைக்கப்படுகின்ற காலப்பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்பதற்காக பண்ணையாளர்கள் மிகவும் துன்பப்படுகின்ற நிலைமை முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக காணப்படுகின்றது.

வீதியோரங்களில் கால்நடைகளை வளர்ப்பதால் வீதியில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுவது மாத்திரமல்லாமல் வீதியோரத்தில் கால்நடைகள் உணவு கிடைக்காது உயிரிழக்கின்ற நிலைமையும் ஏற்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மிக விரைவில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை அமைத்து தங்களுடைய கால்நடைகளை பாதுகாத்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

received 1152776045137519 1

 

 

.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.