தனது தாயாரை கத்தி ஒன்றினால் கடுமையாக தாக்கிய ஆசிரியை.. வீடியோ சமூக வலைகளில் வைரலானதை அடுத்து கைது!

தனது தாயாரை கத்தி ஒன்றினால் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் பட்டதாரி ஆசிரியை ஒருவரை கம்பளைப் பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியயை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் லலித் வீரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நபரை நீதிவான் கடுமையாக எச்சரித்து 5,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.

கம்பளை சிங்ஹாப்பிட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான மேற்படி பட்டதாரி ஆசிரியை கத்தியினால் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த பெண் கம்பளை நகரில் அமைந்துள்ள தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் சந்தேக நபர் தனது தாயார் தன்னிடம் அனுமதி கோராமல் இடியப்பம் சாப்பிட சொதி ஊற்றிக் கொண்டமையால் சினமடைந்து அவரின் கைகளாலும் கத்தி ஒன்றினாலும் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதனை ஆசிரியையின் 10 மற்றும் 9 வயதுகளுடைய அவரின் இரு பிள்ளைகளும் தாய்க்குத் தெரியாமல் கைத்தொலைபேசியில் வீடியோ செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வீடியோவானது இரு தினங்களுக்கு முன்னர் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் மகளிடம் சிக்கியதனையடுத்து அதனை அவர் சமூக வலைத்தலத்தில் பதிவேற்றியுள்ளார்.

பின்னர் இந்தக் காணொளி சமூக வலைத்தலங்களில் வைரலான நிலையில் மேற்படி வீடியோ கம்பளை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதனையடுத்து குறித்த ஆசிரியயை ஞாயிற்றுக்கிழமை (10) கைது செய்து அன்றைய தினம் மாலை மேலதிக நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே மேற்கண்ட உத்தரவை நீதிவான் பிறப்பித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.