அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் செயற்குழு அமர்வு!
சமாதானமும் சமுகபணியும்(PCA) அனுசரணையுடன் இயங்கிவரும் அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர் எஸ்.எல். அப்துல் அஸீஸ் ஒருங்கிணைப்பில், அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் செயற்குழு அமர்வு சமாதானமும் சமுகம் பணியும்(PCA) இணைப்பாளர் ரீ. ராஜேந்திரன் தலைமையில் கடந்த வியாழன் (21 ) அம்பாறை ரன்வீம ஹோட்டல்களில் இடம்பெற்றது.
இவ் அமர்வில் விஷேட பிரமுகர்களாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், சமாதானமும் சமுகம் பணியும் (PCA) தேசிய பணிப்பாளர் ரீ. தயாபரன், மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைப்பாளர் இர்பான் மற்றும் சமாதானமும் சமுகபணியும் (PCA) நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட நல்லிணக்க மன்றங்ககளின்
இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் போது நல்லிணக்கம் சம்பந்தமான கருத்தாடல்கள் இடம்பெற்றது.
கருத்துக்களேதுமில்லை