கிழக்கு ஆளுனர் செயலகத்தில் தைப்பூசை திருநாள் நிகழ்வு
தைப்பூசை திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இன்று (28) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் தலைமையின் கீழ் தைப்பூசை நிகழ்வு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சிவில் பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்த தெரு நாடகமும் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதனாயக்க, கிழக்கு மாகாண முதலமைச்சின் மாகாண செயலாளர். யு.எல்.ஏ. அஸீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை