ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் (01.02.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீர்ப்பாசன அமைச்சினால் இந்த வருடத்தில் இந்த திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துகின்றோம். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்தின் முதலாவது திட்டமாக நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் விவசாயத்திற்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறையில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்திற்கு நீர்ப்பாசன அமைச்சு முக்கியத்துவம் வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை