(வீடியோ) அம்பாறையில் இராணுவத்தினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனுக்குமிடையே முறுகல்.
அம்பாறையில் இராணுவத்தினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனுக்குமிடையே இன்று (02)பிற்பகல் தம்பிலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மக்களை சந்திக்க சென்ற வேளை சோதனைச்சாவடியில் நின்ற இராணுவத்தினர் பாராளுமன்ற உறுப்பினரது வாகனத்தை சூழ்ந்து தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
பிரதான வீதியில் வாகனத்தை நிறுத்தி அவமதிக்கும் நோக்கோடு வாகனத்திலிருந்து இறங்குமாறு சத்தமிட்டனர். இதனை தொடர்ந்து வாகனத்தை சோதனையிட்டபோது முறுகல் ஏற்பட்டது.
கருத்துக்களேதுமில்லை