மேல் மாகாணத்தில் பாலர் பாடசாலைகள் 15 ஆம் திகதி முதல் ஆரம்பம்!

மேல் மாகாணத்தில் கொரோனா அனர்த்தம் குறைவாக உள்ள பிரதேசங்களில் பாலர் பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பி.எல்.நிஷாந்த நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

பாலர் பாடசாலை ஆசிரியர்கள் தற்போதைய கொவிட் நிலைமையினால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்கள் பெரும் நெருக்கடி நிலையை எதிகொள்ள வேண்டி ஏற்பட்டதால் சில ஆசிரியர்கள் வீதி ஓரத்தில் சோளம் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் கொவிட் அனர்த்தம் இல்லாத ஏனைய இடங்களில் பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு இதற்கு முன்னர் நாம் அனுமதி வழங்கியுள்ளோம்.
தற்பொழுது மேல் மாகாணத்தில் இந்த பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பெரும் சிமங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
நாம் விடேசமாக கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேல் மாகாணத்தில் கொவிட் அனர்த்தம் குறைந்த பகுதிகளில் இந்த பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.