பொருத்தமான தடுப்பூசியைப் பெற அரசால் முடியவில்லை! – சஜித் குற்றச்சாட்டு

இலங்கைக்குப் பொருத்தமான கொரோனாத் தடுப்பூசியை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசால் முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

அம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ]கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் வழங்கப்படும் ‘ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனிகா’ என்ற கொரோனாத் தடுப்பூசியால்  நாட்டில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியுமா?

கொரோனாத் தடுப்பூசி வழங்குவது தொடர்பாக அரசுக்கு எந்தத் திட்டமும் இல்லை.

நாட்டுக்குப் பொருத்தமான கொரோனாத் தடுப்பூசியை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசால் முடியவில்லை.

அரசு ஒரு கேளிக்கையான தொலைக்காட்சி நாடகத்தை நடத்துகின்றது. இதன் இயக்குநர் பந்துல குணவர்தன” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்