மஹிந்த ராஜபக்ஷவிற்கான மரியாதையை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது – ரவுப் ஹக்கீம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கான மரியாதையை வழங்க அரசாங்கம் தவறிவிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதாக அண்மையில் அவர் தெரிவித்த கருத்தை, ஏற்றுக்கொள்ளாதமை அவரை அவமானப்படுத்தும் செயற்பாடு என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாறு பிரதமரின் கருத்தை புறக்கணிப்பதற்கும் அவரை அவமானப்படுத்துவதற்கு என ஒருசில தரப்பினர் செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறான நடவடிக்கை மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவமதித்துள்ளமை தெளிவாகியுள்ளதாகவும் ரவுப் ஹக்கீம் குற்றம் சாட்டினார்.
அரசாங்கத்திற்குள்ளேயே இடம்பெறும் இந்த மோதல் அவர்கள் சரியான கொள்கையை பின்பற்றவில்லை என்பதையே காட்டுவதாகவும் ரவுப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
கருத்துக்களேதுமில்லை