பொத்துவில் தொடங்கி பொலிகண்டி பேரணி; யாழ்.மாநகர முதல்வரிடம் வாக்குமூலம்!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஆகியோரிடம் இன்று பிற்பகல் வாக்குமூலம் பெறப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், மணிவண்ணனிடம் மன்னார் மற்றும் பருத்தித்துறை காவல்துறையினர் மாநகர சபை முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று வாக்குமூலம் பெறுகின்றனர்.

சிங்களமொழியில் வாக்குமூலத்தை பதிவு செய்ய காவல்துறையினர் முயற்சித்த போதும் அதற்கு மறுப்புத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், வி.மணிவண்ணன், தான் தெரியாதமொழியில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் கையொப்பமிட மாட்டேன் என உறுதியாகக்கூறினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்