சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 3200 பேருக்கும் அதிகமானோர் கைது!

சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக நேற்றையதினம் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் ஒரே விடுதியில் தங்கியிருந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக இதுவரையில் நாட்டில் 3200 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்