காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட தகவல்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட தகவல்

உங்கள் மகனையோ அல்லது கணவரையோ இழப்பது குறித்து சிந்தித்துப்பாருங்கள் என அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் தான் நடத்திய சந்திப்பு குறித்து தனது ருவிட்டர் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்துள்ள அமெரிக்க தூதுவர் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளை கண்டுபிடிப்பதற்கான அவர்களின் பேராட்டம் குறித்து தனது டுவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் மகனை அல்லது கணவரை இழப்பது குறித்து சிந்தித்துப் பாருங்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியமுடியாமலிருப்பது குறித்து கற்பனை செய்து பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

அதுவே காணாமல்போனவர்களின உறவினர்களின் மனதை மிகவும் வேதனைப்படுத்தும் அனுபவம் என டுவிட்டரில் அலைனா டெப்பிளிட்ஸ் பதிவிட்டுள்ளார்.

பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மதிக்கவேண்டும்,காயங்களை ஆற்றுவதற்காக தனது சொந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மதிக்கவேண்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Image

Image

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.