மக்களின் பிரச்சினை தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் பீ.எம். ஷிபானின் கோரிக்கைக்கு கல்முனை மேயரினால் தீர்வு.
(நூருல் ஹுதா உமர்)
கல்முனை மாநகர பிரதேசங்களில் மலசலகுழி சுத்தப்படுத்தல் சேவைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க மாநகர மேயர் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை கடந்த மாதம் ஊடகங்கள் வாயிலாகவும், கல்முனை மாநகரசபையின் சுகாதாரக்குழு ஊடாகவும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ .எம். ஷிபானினால் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 34வது கல்முனை மாநகரசபை அமர்விலும் முன்வைக்கப்பட்டிருந்தது.
கல்முனை மாநகர பிரதேசங்களில் வாழுகின்ற ஏழை மக்களின் நலன் கருதியே “சுமார் 8500 ரூபா வரை சேவை கட்டணமாக அறவிடும் சுத்திகரிப்பாளர்களின் பணியானது திருப்திகரமானதாக இல்லை என்பதோடு அதனை நிறைவான சேவையாக மாற்றப்படவேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்போது மாநகர சபை உறுப்பினர் பீ.எம்.ஷிபான் அவர்கள் மேயருக்கும் குழுவின் தலைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன் மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர் மாநகரசபை எல்லையில் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கான சேவைக் கட்டணமும், சோலை வரிக்கான கட்டணமும் தனித்தனியான படிவங்கள் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படுவதோடு அதில் காணப்படுகின்ற குளறுபடி நடவடிக்கைகள் முற்றிலுமாக திருத்தப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்ததுடன் உரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கைகளை கல்முனை மாநகர மேயர் ஏற்றுக் கொண்துடன் சபையும் அங்கீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை