காட்டு யானைகளின் அட்டகாசத்தால் அச்சத்துடன் வாழும் கிளிநொச்சி-கண்டாவளை மக்கள்!
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் புரிவதாகவும், அதனால் தாம் அச்சத்தில் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராமவாசிகள் பாரிய அளவில் விவசாயத்தயே தமது தொழிலாக மேற்கொண்டுள்ளனர்.
தற்போது யானைகள் அங்கு வர ஆரம்பித்துள்ளன எனவும் இதுவரை காலமும் வராத யானைகள் எவ்வாறு திடீரென வந்தது எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் அடர்ந்த காடுகளும் இல்லாத நிலையில் எவ்வாறு இந்த யானைகள் வந்தன எனவும் தமது பயிர் நிலங்களையும், தென்னைமரங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாகவும் மக்கள் கவலை தெரித்துள்ளனர்.
உரிய விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களமும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு, தமது வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை