மன்னாரில் குருதி வழங்க ஒன்று திரண்ட பொதுமக்கள்

தலைமன்னார் பகுதியில் ஏற்பட்ட புகையிரத விபத்து காரணமாக காயம் அடைந்தவர்களுக்கு குருதி வழங்குவதற்கான குருதி தேவை தொடர்பாக வைத்திய சாலை நிர்வாகம் கோரிக்கை வழங்கியதை தொடர்ந்து மன்னாரின் பல பகுதிகளில் இருந்து இளைஞர் யுவதிகள் மாத்திரம் இல்லாமல் பலர் வருகை தந்து குருதி வழங்கி வருகின்றனர்.

விபத்தில் 25 மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இரத்தம் வழங்குவதற்கு தன்னார்வத்துடன் வருகை தந்த போதிலும் ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் வைத்திய சாலையின் இன்றைய அவசர கால நிலை காரணமாக குறிப்பிட்ட அளவு இரத்தமே பெற்றுக்கொள்ளப்பட்டு இரத்தம் சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்னும் இரத்த தேவை காணப்படுவதனால் நாளையதினமும் மன்னார் பொது வைத்திய சாலை இரத்த வங்கியில் குருதி வழங்க முடியும் என தெரிவிக்கப்படுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்