இளைஞர்களின் விளையாட்டு திறனை இனங்கானும் முகமாக தேசிய டலன்ட் ஹன்ட் “(TALENT HUNT) வேலைத்திட்டம்

(எம்.என்.எம்.அப்ராஸ்,பீ. எம்.ரியாத்)
இளைஞர் விவகாரம்  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால்நடாளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விளையாட்டுத்துறையில் ஈடுபடுகின்ற இளைஞர்களின்    திறமைகளை தேடி செல்லும்    ” டலன்ட் ஹன்ட் “
(TALENT HUNT) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்   கிழக்கு மாகாணத்திற்கான பிரதான நிகழ்வு அம்பாறை செனரத் சோமரத்ன பொது மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால தலைமையில்  கடந்த வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது .
அம்பாறை ,மட்டக்களப்பு ,திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து இதில் கொண்டதுடன் ,குறித்த இவ் விளையாட்டு தெரிவில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டியதுடன் இவர்கள் அதிகாரிகளினால் மேற்பார்வை செய்யப்பட்டு  அவதானிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு பொறுத்தமான  விளையாட்டு பிரிவுக்கு  அழைத்துச் செல்வதற்கான செயல்முறை பயிற்சி இங்கு  நடைபெற்றது.
இந்நிகழ்வின் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர்  டபிள்யூ.டி.வீரசிங்க, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஷ,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மற்றும்  மட்டக்களப்பு மாவட்ட  உதவிப் பணிப்பாளர்களான கங்கா சாகரிகா தமயந்தி ,ஆலித்தீன் ஹமீர்,மாகாண காரியாலயத்தின் நிர்வாக உத்தியோகத்தர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விளையாட்டு பிரிவின் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் நிர்மலி வத்சலா மற்றும் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களான ரூவா சுமிஜெயலா தனூஜா திஸாநாயக்க விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள்  மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சி திட்டத்தின் பிரதான நோக்கம் இளைஞர் யுவதிகளிடம்  உள்ள விளையாட்டு திறனை இனங் கண்டு விருத்தி செய்து சர்வதேச தரத்திலான  சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதாகும் . இவ் தேசிய வேலைத்திட்டத்தில் 15 வயது தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள்  மாத்திரம்  உள்வாங்கப்பட்டமை  இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.