பசறை விபத்து – பெற்றோரை இழந்து தவிக்கும் 3 பிள்ளைகள்!

பசறை பஸ்விபத்தில் 15 பேரை காவு கொண்ட சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு சோகங்கள் புதைந்துகிடக்கின்றன.

லுணுகலையைச் சேர்ந்த அந்தோனி நோவா 2021-03-2021ல் கண்சிகிச்சைக்காக பதுளை அரசினர் மருத்துவமனைக்கு அவரது மனைவி பெனடிக்மெரோனாவுடன் புறப்பட்டார்.

இவர்கள் இருவரும் பஸ்நிறுத்துமிடத்திற்குவந்தபோது, குறிப்பிட்ட பஸ் சென்றுள்ளதாக அறிந்தனர். அப்பஸ்ஸில் போனால் மட்டுமே, கண் சிகிச்சைக்காக முதலில் இருக்கலாம். உரிய நேரத்தில் போகலாம் என்ற நிலையில், சென்ற அவ் பஸ்சில் செல்வதற்கு, அவ்விடத்திலிருந்து ஆட்டோவொன்றில் ஏறினர். குறிப்பிட்ட ஆட்டோவும் வேகமாகச்சென்று, ஏற்கனவே சென்றிருந்த அப்பஸ்சை தடுத்து நிறுத்தி இருவரும் பஸ்சில் ஏறினர்.

குறிப்பிட்ட பஸ்சை துரத்திச்சென்று, ஏறிய தம்பதிகளின் பயணம், பசறை – 13ம் மைல்கல்லுடன் முடிவடைந்தது.அந்தோனி நோவா’வேல்டிங்’ இரும்பு பொருத்துனர் வேலையிலேயே ஈடுபட்டுவருவபராவார். மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
இத்தம்பதிகள் பதுளை மருத்துவ மனைக்கு செல்லவிருந்த பஸ் கடந்து சென்றபோதிலும், மீண்டும் அப்பஸ்சைப்பிடித்துஏ றிச்சென்று, இவர்கள் காலனை அரவணைத்துக்கொண்ட இச்சோகச் சம்பவங்கள் போன்று, வேறு பலசோகங்களும் இருந்துவருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.