வா​ழைப்பழம் ஒன்றினால், ​ஹோட்டல் ஊழியரின் உயிர், அநியாயமாக காவுக்கொள்ளப்பட்ட சம்பவம்

வா​ழைப்பழம் ஒன்றினால், ​ஹோட்டல் ஊழியரின் உயிர், அநியாயமாக காவுக்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த ஹோட்டலில் வாழைப்பழமொன்றை கொள்வனவு செய்த நுகர்வோர், வாழைப்பழத்தின் விலை அதிகமாகும் என ஹோட்டலில் குழப்பம் விளைவித்துள்ளார்.

அந்த வாழைப்பழத்தின் உண்மையான பெறுமதி 30 ரூபாயாகும். அதனையே ஹோட்டல் உரிமையாளரும் தெரிவித்துள்ளார். எனினும், விலையை ஏற்றுக்கொள்வதற்கு நுகர்வோர் மறுத்துவிட்டார்.

வாழைப்பழத்தின் விலையைக் கேட்டு கடுமையாக கோபமடைந்த அந்த நபர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது விவரத்தை கேட்பதற்கு ஹோட்டல் ஊழியர் வருகைதந்துள்ளார். அப்போது, அங்கிருந்த போத்லொன்றை உடைத்து குத்திவிட்டு, அந்நபர் தப்பியோடிவிட்டார். அவ்வாறு ​ஓ​டியவர், தொலைபேசி கூடாரமொன்றுக்குள் மறைந்துகொண்டுள்ளார்.
எனினும், அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

போத்தல் குத்துக்கு இலக்கானவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.