யாழ் மரக்கறி சந்தை தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது- கேதீஸ்வரன்

யாழ்ப்பாணம் மாநகரில் மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டதாகவும் இதில் 9 வியாபாரிகளுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தொற்றாளர்களில் 6 உள்ளூர் உற்பத்திப் பொருள்கள் (பனம் பொருள்கள்) வியாரிகள் எனவும், மூன்று பேர் மரக்கறி வியாபாரிகள் எனவும் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தைத் தொகுதியின் அத்தனை வியாபாரிகளும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன அதே வேளை இன்றையதினம் சிலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.