இன்று முதல் நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளுக்கு தடை

உள்நாட்டில் பயன்படுத்தப்படும் நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளுக்கு இன்று (31) முதல் தடை விதிக்கப்பட்டள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பில் சுற்றாடல் அமைச்சு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

‘குறிப்பிட்ட உற்பத்திகளுக்கு இன்று (31) முதல் நாட்டில் தடை அமுல்படுத்தப்படவுள்ளது’ என  அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதற்கிணங்க, ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்,20 மைக்ரோனுக்கும் குறைந்த Lunch sheets , உணவு மற்றும் மருந்துகளற்ற Sachet, பக்கெட்கள், Cotton buds மற்றும் காற்றடைக்கப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.