சுமார் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

சுமார் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 6 பேர் மினிகோய் தீவுக்கு அருகில் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடலோர காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இலங்கைக்கு சொந்தமான நெடுநாள் மீன்பிடி படகொன்று சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.

அதனை சோதனையிட்ட போது 300 கிலோகிராம் ஹெரோயினுக்கு மேலதிகமாக ரஷ்ய உற்பத்தியான ஐந்து ஏகே 47 ரக துப்பாக்கிகளும், அதற்கு பயன்படும் 1000 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்