எட்டு மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இன்று (6) அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைக்கேற்றளவு நீர் அருந்துதல், முடிந்த வரை நிழல் தரக்கூடிய இடங்களில் இருத்தல் போன்ற விடயங்களை கையாள வேண்டும் என்பதுடன், வயோதிபர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், கடினமான வேலைகளில் ஈடுபடுவதை குறைத்தல் மற்றும் வெள்ளை நிற அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்