தந்தைக்குச் சொந்தமான பஸ்ஸினை ஓட்டிய 15 வயது மாணவன் கைது!

செல்லுப்படியாகும் உரி​மம் பத்திரம் இல்லாமல், 53 ஆசனங்களைக்கொண்ட பஸ்ஸொன்றை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 15 வயதான பாடசாலை மாணவனை மித்தெனிய ​பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான அந்த பஸ்ஸை, தங்களுடைய வீட்டிலிருந்து மித்தெனிய நகரத்துக்கு செலுத்திக்கொண்டு வந்தபோதே இவ்வாறு அம்மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இம்முறை, கல்விப்பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சையில் தோற்றவிருக்கும் வயது குறைந்த ஒருவரை இவ்வாறு பஸ்ஸை செலுத்துவதற்கு அனுமதியளித்தமை தொடர்பில் பஸ்ஸின் உரிமையாளர் எனக் கூறப்படும் தந்தையை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்