காரைதீவு பகுதியில் சட்ட விரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கள் மீட்பு !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பகுதியில் சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி ஒருவரின் வீட்டில் இருந்த மதுபான போத்தல்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது .

சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் காரைதீவு பகுதி பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே .சதீஸ்கரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரினால் திங்களன்று இரவு (26) மேற்கொள்ளப்பட் சுற்றிவளைப்பின்போது மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்யப்படவிருந்த 83 கால் போத்தல் சாரய போத்தல்கள், ,38பீயர் டீன்கள் குறித்த சுற்றி வளைபப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர் மேலும் இது தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்