மே18இல் வீட்டிலிருந்தவாறு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துங்கள்! தவிசாளர் ஜெயசிறில்

(வி.ரி.சகாதேவராஜா)

உலகத்தமிழ் மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். எமது இனத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த
தியாகிகளுக்காக எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 18.00மணி 18நிமிடம் 18வினாடியில்
அரசின் சட்டதிட்டங்களை மதித்து சுகாதார வழிமுறைகளைப்பின்பற்றி வீட்டிலிருந்தவாறு
விளக்கேற்றி ஆத்மாசாந்திக்காய் அஞ்சலி செலுத்துமாறு தயவாய் வேண்டுகிறேன்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் 39ஆவது மாதாந்த அமர்வு  (12)புதன்கிழமை
நடைபெற்றபோது சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள்விடுத்தார்.
குறித்த அமர்வு இன்று சபாமண்டபத்தில் நடைபெற்றபோது அவர் மேலும் பேசுகையில்:
சமகால கொரோனா அசாதாரணநிலைமை காரணமாக எமது சுகாதாரவைத்தியஅதிகாரியின்
வேண்டுகோளுக்கமைவாக இன்றுமுதல் வெளியூர் அங்காடி வியாபாhரிகளுக்கு தடைவிதிக்கிறது
இச்சபை.

வருமானம் குறைந்த சபையாக எமது சபை இருந்தபோதிலும் எமது முயற்சியினால் 20லட்சருபா
இருப்போடு இருப்பது மகிழ்ச்சிதருகிறது. எனினும் எமக்கு கல்முனை மாநகரசபையிடமிருந்து
பலலட்சருபா தருமதி இருக்கிறது. இன்றோநாளையோ கிடைக்கக்கூடும் என மேயர்
கூறியிருக்கிறார். அதுவந்தால் உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யலாம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்