யாழில் கொரோனா நோயாளிகளுக்கு புதிய விடுதிகள்

கொரோனா நோயாளிகளாக இனங்காணப்படுவோருக்கு சிகிச்சையளிக்க புதிய விடுதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

நாட்டில் தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றுக்குள்ளாவோருக்கு சிகிச்சை வழங்கக்கூடியவாறான ஏற்பாடுகள் மாகாண சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை ,அதி தீவிர சிகிச்சை , ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு சிகிச்சை வழங்க மற்றும் கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்படும்போது அவர்களுக்கு விசேட சிகிச்சை வழங்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு விடுதிகள் கொரோனா சிகிச்சைக்கு என தயார் படுத்தப்பட்டுள்ளன.

புதிதாகத் தயார்படுத்தப்பட்டுள்ள விடுதியினை யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் நேரில் சென்று பார்வையிட்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்