திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 61 புதிய தொற்றார்கள் இன்று இனங்காணல்…
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 61 புதிய தொற்றார்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
31 ஆண்களும் 30 பெண்களும் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக கந்தளாய் 15, பதவி சிரிபுர 10, ஹோமரன்கடவெல 9, மூதூர் 9, சேருவில 7, உப்புவெளி 5, குறிஞ்சாகேணி 3, கிண்ணியா 3 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் 48 பேர் கொவிற் காரணமாக மரணத்தை தழுவியுள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் வாரியாக திருகோணமலை 13 கிண்ணியா 10 உப்புவெளி 9 குறிஞ்சாக்கேணி 7, மூதூர் 5, கந்தளாய் 3, குச்சவெளி 1 என மரணங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை