புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல்.

புத்தாக்க அரங்க இயக்கம்  நடத்தும்  இணையவழி பன்னாட்டு  அரங்க கதையாடல் 01 நிகழ்வு   புரட்டாதி மாதம் 7,8,9,10 ஆம் திகதிகளில் இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின்  பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந் நிகழ்வில் 7.9.2021 செவ்வாய்க்கிழமை பேராசிரியர் சி.மௌனகுரு (இலங்கை) நாடகமும் ஆற்றுகையும், 8.9.2021 புதன்கிழமை தஞ்சாவூர் உதிரிநாடகநிலம் நாடகச் செயற்பாட்டாளர் விஜயகுமார் (தமிழ்நாடு இந்தியா) கல்விநிலையில் நவீனநாடகத்தின் பங்கு , 9.9.2021 வியாழக்கிழமை அவைக்காற்றுக் கலைக்கழகம் க.பாலேந்திரா ஆணந்தராணி பாலேந்திரா (லண்டன்) கண்ணாடி வார்ப்புக்கள் நாடக அனுபவம் ,10.9.2021 வெள்ளிக்கிழமை பேராசிரியர் பால – சுகுமார் (லண்டன்) ஈழநாட்டியம் ஆகிய விடயங்களில் கதையாடவுள்ளார் .
ஏற்புரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின்  நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.
இவ் இணையவழி அரங்க கதையாடல்  நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.