முதலாவது டோஸ் தடுப்பூசி – மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு.

(க.கிஷாந்தன்)

நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தடுப்பூசி வழங்கும் செயத்திட்டத்திற்கமைய கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரதேசத்திற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன், போகாவத்தை ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி வழங்கும்  நிகழ்வு 07.09.2021 அன்று திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

சீன தயாரிப்பான சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸே இவ்வாறு ஏற்றப்பட்டது.

இப்பகுதி மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதன் பின் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் இதனை கவனத்திற் கொண்டு உடனடியாக இப்பகுதிக்கு 3500 தடுப்பூசிகளை பெற்றுக் கொடுத்த நிலையில் இன்றைய தினம் அவ் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டமை குறிப்பிடதக்கது.

இதனை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை ஏற்றிக் கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்