நாட்டில் மீண்டும் அதிகரிக்க கொரோனா மரணங்கள், 11,000ஐ தாண்டியது!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 157 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதில்  70 ஆண்களும், 87 பெண்களும் அடங்குவதாகவும்  30 வயதிற்கு குறைந்தவர்கள் 4 பேர் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்