மதுப்பிரியர்கள் நீண்டவரிசையில்….
(க.கிஷாந்தன்)
மதுபானக் கடைகளைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மலையக தோட்டப் பகுதிகளில் இன்று (17) மதுபானங்களை வாங்குவதற்கு ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்ட போதிலும் மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டு காணப்பட்டனர்.
ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சில மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள மதுப்பிரியர்கள் சரியான சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாமல் மதுபானங்களை வாங்க திரண்டனர்.
அந்தவகையில், அட்டன் நகரிலும் இவ்வாறான ஒரு நிலைமையே காணப்பட்டது.













கருத்துக்களேதுமில்லை