பொது மக்களின் நடத்தை தொடர்பில் இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

ஒக்டோபர் மாதத்தில் பதிவாகும் கொரோனா நிலவரங்கள் அடுத்துவரும் மாதங்களில் நாட்டின் நிலைமையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டால் அடுத்து வரும் காலப்பகுதியில் பொதுமக்களின் நடத்தை மிகவும் முக்கியமானது. நாட்டை மீண்டும் திறந்ததன் பின்னர் சேவைகளைச் செயற்படுத்துவதற்கான விரிவான திட்டங்களை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் கோவிட் நோய்த் தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது.

நாட்டில் புதிய கோவிட் கொத்தணிகள் உருவாகுவதைத் தடுக்கும் வகையில் பெரிய கூட்டங்களைத் தடுப்பதற்காக நாட்டைப் பல கட்டங்களாக மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.