Street Child ஊடாடும் வள கற்றல் மையம் மட்டக்களப்பில் திறப்பு…

Street Child Srilanka  நிறுவனம் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து செயற்படுத்தும் ஊடாடும் வள கற்றல் மையம் திறப்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள இந்த ஒலிப்பதிவுக் கூடம் மற்றும் கற்றல் மையம் என்பது இலங்கை சுவிட்சர்லாந்து தூதரகத்தால் நிதி வழங்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

கொவிட் 19 தொற்றுநோய்க்கு மத்தியில் இலங்கையில் பாடசாலை மூடல்கள் நீடிப்பதால், மாணவர்களுக்கான ஊடாடும் கற்றல் பொருட்கள் உருவாக்க ஒரு ஊடாடும் வள கற்றல் மையத்தின் வடிவமைப்பு உட்பட 3 முக்கிய நிலைகளை இந்த திட்டம் கொண்டுள்ளது. இரண்டாவது கட்டம் மாணவர்களுக்கு வீட்டிலேயே கற்றலைத் தொடரத் தேவையான ஒரு வீட்டு அடிப்படையிலான கற்றல் திட்டத்தை உள்ளடக்கும்.

இத்திட்டத்தின் இறுதிக் கட்டம் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது வகுப்பறையில் உள்ளடக்கிய மற்றும் ஊடாடும் கற்றலை இணைக்கும் ஆசிரியர்களின் திறனை வலுப்படுத்தும் முகமாக இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

மேற்படி நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், கிராமிய வளர்ச்சித் துறையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் என்.தனஞ்செயன் மற்றும் மட்டக்களப்பு வையக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.குகேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.