யுகதனவி மின் நிலைய விவகாரம்: எமது பதவிகளைத் துறந்தேனும் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வோம்-உதய கம்மன்பில

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தாய்நாட்டிற்கு அனைத்து வகையிலும் அச்சுறுத்தலாக அமையும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித் துள்ளார்.
புறக்கோட்டையில் உள்ள சோலிஸ் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ‘மக்கள் பேரவை’ மாநாட்டில் கலந்து கொண்டு உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான திட்டத்தை எதிர்க்காவிட்டால் எதிர்கால சந்ததியினர் எம்மைச் சபிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை ஜப்பானுக்கு, இந்தியாவுக்கு தென்கொரியாவுக்குக் கொடுப்பதாகவும் நாங்கள் ஒத்துக்கொண்டோம் என்றும் மூன்று நாடுகளுக் கும் கொடுக்க முடியாது என்பதற்காகத் தான் வேறு குத்தகைக்குச் சென்றோம் என்றும் சீனா, பாகிஸ் தானுக் குக் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு வழங்க ஒப்புக்கொண்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவும் பாகிஸ்தானும் சர்வதேச அரங்கில் இலங்கையு டன் நின்று இலங்கையின் நண்பர்களாக இருந்த நாடுகள் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்றபோது ஆபத்தான நேரத்தில் இலங்கைக்கு ஆலோசனை வழங்கி சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவி வழங்கின என்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக, இலங்கைக்கு எதிராக எப்போதும் செயற்படும் அமெரிக்காவிடம் அரசாங்கம் மின் உற்பத்தி நிலையத் தின் பங்குகளை ஒப்படைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு துரோகம் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத் தல் என அவர் தெரிவித்துள்ளார்.
எமக்குத் தீமை செய்யும் அமெரிக்காவிற்குக் கொடுக்க தீர்மானித் தமையால் நண்பர்கள் பகைவர்களாக மாறி விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் நினைப்பார்கள் இவர்களுக்குத் தீமை செய்தால் தான் எங்களுக்குச் சலுகை செய்வார்கள் என நினைத்து சீனாவும் பாகிஸ்தானும் தீமை செய்தால் அது குறித்து புதுமை அடைய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித் துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையி லும் எதிர் காலத்தில் தாயகத்திற்குத் தீமை ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்தச் செயல் அமைந்துள்ளதென்றும் எனவே இந்த நடவடிக்கையைத் தோற்கடிக்கும் வகையில் நாங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பாவிட்டால் நாடு மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்களின் அமைச்சர் பதவியைப் பாதுகாத்துக் கொள் வதற்காக அரசாங்கம் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் அமைதியாக இருப்பதால் எதிர்கால சந்ததியினர் எங்களுக்குத்தான் சாபம் விடுவார்கள் என்றும் அமைச்சர் பதவி மாத்திரமன்றி எதனை இழந்தால் இதிலிருந்து மீட்க முடியுமோ அனைத்தையும் இழக்கத் தயாராகவுள்ளோம் என்றும் ஒன்றிணைந்து செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையைத் தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், மக்களுடன் இணைந்து நிற்பதற்காக தமது அமைச்சுப் பதவிகளை இழக்கவும் தயாராக இருப்பதா கவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.