தடுப்பூசிக்கு கட்டுப்படாத A30 கொவிட் பிறழ்வு!

உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தும் A30 என்ற புதிய வகை கொவிட் வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த A30 வைரஸ் பிறழ்வு தொடர்பில் இலங்கை மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

இந்த வைரஸ் பிறழ்வானது, தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாது என கண்டறியப்பட்டுள்ளது.

பைசர், அஸ்ட்ராசேனிகா உள்ளிட்ட அனைத்து வகை தடுப்பூசிகளுக்கும் இந்த வைரஸ் பிறழ்வு கட்டுப்படாது என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த வைரஸ், பரவும் பட்சத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மக்கள் பொறுப்பின்றி நடந்துக்கொண்டால், எதிர்வரும் 4 வாரங்களில் அபாயகரமான பெறுபேறுகளை சந்திக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன குறிப்பிடுகின்றார்.

திருமண நிகழ்வுகள், மரண வீடுகளில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.