ரணில் பிரதமராக நியமனம் பெற பொறுத்தமற்றவர் விபரம்…
ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசியல் முடிவுகளை எட்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்களால் அங்கீகரிக்கப்படாத, நடுநிலை அற்ற ஒருவரை பிரதமராக நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவிடயம் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய நிலையில் நாட்டுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களை விடுத்து அரசியல் தீர்மானம் ஒன்றுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பிரதமராக ரணில் நியமிக்கப்படுவதன் ஊடாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரணில் நியமிக்கப்படும் விடயமானது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார். ஓமல்பே சோபித்த தேரர், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட சமயத்தலைவர்கள் இவ்வாறு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை