சிறிகொத்தவை கைப்பற்றுவது மாத்திரமே சிலரது குறிக்கோளாக காணப்படுகின்றது – மஹிந்த

சிறிகொத்தவை கைப்பற்றுவது மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் முக்கிய குறிக்கோளாக காணப்படுகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் ...

மேலும்..

PHI அதிகாரிகளுடன் இன்று விசேட கலந்துரையாடல்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சில் இன்று (புதன்கிழமை) குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில், சுகாதார அமைச்சின் ...

மேலும்..

புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்!

புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. துல்ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ​நேற்று(செவ்வாய்கிழமை) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்தே குறித்த அறிவிப்பினை கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும்..

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் கொரோனா தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்றுநோய் பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுவரை இலங்கையில் 2,730 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில், 07 பேர் நேற்று குணமடைந்ததை அடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,048 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் என்பது ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சஜித் தரப்பிற்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன – மஹிந்த!

சஜித் பிரேமதாஸ நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2005ஆம் ...

மேலும்..

‘சமூகப் பிரச்சனைகளை தீர்க்காது தேர்தல் காலத்தில் வீரவசனம் பேசுவோர் நிராகரிக்கப்பட வேண்டும்’ – ரிஷாட்

அதிகாரங்கள் இருந்த போது சமூகப் பிரச்சினைகளை பிரச்சினைகளாகவே வைத்திருந்துவிட்டு, தேர்தல் காலத்தில் மட்டும் அதே பிரச்சினைகளை தீர்த்துத் தருவதாகக் கூறி வாக்குக் கேட்பவர்களை நிராகரிக்க வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில், மக்கள் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழகம் தனது சுயாதீனத்தை இழந்து நிற்கிறது – மாணவர் பிரதிநிதிகள் தெரிவிப்பு

யாழ். பல்கலைக்கழகம் தனது சுயாதீனத்தை இழந்து நிற்பதனால், சட்டபீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அழுத்தத்தங்களால் ‘சட்ட முதுநிலை விரிவுரையாளர்’ பதவியை இராஜினாமா செய்தார் என யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் லூ.அனுஷன் தெரிவித்தார். கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் தனது ...

மேலும்..

தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை – மன்னார் ஆயர் கவலை

தமிழ் அரசியல் நிலைமை இன்னும் குழப்பமானதாக உள்ளது. முன்பு ஓரளவுக்கேனும் இருந்த ஒற்றுமை நிலைமை இன்று இல்லாது போய் விட்டது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். தமிழ் மக்களாகிய நமக்கு இன்று இருக்கக்கூடிய ஒரேயொரு ஆயுதம் நமது ...

மேலும்..

பௌத்தத்தின் நிலை கவலையளிக்கிறது: ‘இரத்த ஆறு ஓடும்’ என்ற தேரர்களின் கருத்து குறித்து சுமந்திரன்

சமாதானத்தின் உச்ச நிலையாக உள்ள பௌத்த சமயத் துறவிகள் ‘இரத்த ஆறு ஓடும்’ என்று கூறியுள்ளதன் மூலம் நாட்டில் பௌத்தம் எந்த நிலைக்குப் போய்விட்டது என்பதை எண்ணி கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

நொண்டிச்சாட்டு சொல்லி ஓடுகின்ற கஜேந்திரகுமாரை துரத்திப் பிடிக்கும் அவசியம் எனக்கில்லை – சுமந்திரன் யாருடனும் விவாதத்துக்கு நான் எப்போதும் தயார்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் என்.ஸ்ரீகாந்தா மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கயேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பகிரங்க விவாதத்தை நடத்த தான் தயாராக இருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ...

மேலும்..

பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது

பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது கடமையை ஆற்றக்கூடிய வகையில், சட்ட பின்புலத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு மேலும் 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை பொது ...

மேலும்..

காய்த்த மரத்துக்குத்தான் கல்லெறிபடும்: அதற்காக காய்க்காமல் இருக்க முடியாது- மாவை

காய்த்த மரத்துக்குத் தான் கல்லடி படும் எனவும் அதற்காக மறுமுறை காய்க்காமல் இருக்க முடியாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஆவரங்கால் பகுதியில் நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியுள்ளது- ஜீவன்

நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியுள்ளது எனவும் இந்த அரசியல் கலாசாரம் மாறவேண்டும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா நெருக்கடியின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் மீண்டெழும்போது அதன் பங்காளிகளாக நாம் மாறவேண்டும் ...

மேலும்..

எனது கனவு ஆளும் கட்சி சார்பில் அமைச்சராக வரவேண்டும் என்பதே – சந்திரகுமார்

எனது கனவு ஆளும் கட்சி சார்பில் ஒரு அமைச்சர் வரவேண்டும் என்பதே  என பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு பட்டிருப்புத் தேர்தல் தொகுதியிலுள்ள  மாங்காடு கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ...

மேலும்..

மலையக மக்களுக்கு உரிய வகையில் சேவைசெய்யக்கூடிய ஆற்றல் எமக்கே உள்ளது – திகா

அதிகாரத்தை பயன்படுத்தி மலையக மக்களுக்கு உரிய வகையில் சேவைசெய்யக்கூடிய ஆற்றல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே இருக்கின்றது. எனவே, பொதுத்தேர்தல் மூலம் எமது கரங்களை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட ...

மேலும்..