இறுதிக் கட்டத்தின்போதும் விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எதிர்மறையான கருத்தைச் சொல்லவில்லை… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் – க.துளசி

யுத்தம் மௌனிக்கின்ற தருவாயில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எதிர்மறையான செய்தியினைத் தெரிவிக்கவில்லை. ஆயுதம் மெளிக்கப்பட்டதற்குப் பின்பும் தமிழ் மக்களின் அரசியல் பலம் பெற்றிருக்க வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடு என ஜனநாயகப் போராளிகள் ...

மேலும்..

அரசவை கட்டடம் தகர்ப்பு – இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

குருநாகல் புவனேக ஹோட்டல் நடத்தப்பட்டுவந்த கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை இன்று(புதன்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைய புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான செயலாளரினால் இந்த குழு நியமிக்கப்பட்டது. தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ...

மேலும்..

தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிக்கும் திகதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் எதிர்வரும் ஜுலை 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நிலையங்களில் உள்ளவர்கள் அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 731ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிய ஒருவருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நுரைச்சோலையில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ...

மேலும்..

பாலித தெவரப்பெரும மீது தாக்குதல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்மீது, மத்துகம-வெல்கந்த பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த பாலித தெவரப்பெரும நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

வாக்காளர் அட்டைகள் விநியோகம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது – தபால் திணைக்களம்!

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் சுமார் 60 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகளை விநியோகம் செய்யும் நடவடிக்கள் எதிர்வரும் நாட்களில் நிறைவடையும் என தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பில் 4 ...

மேலும்..

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் “என் கனவு யாழ்” வெளியீடு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் விஞ்ஞாபனம் “என் கனவு யாழ்” செயல்திட்ட வரைவாக இன்றைய தினம் வெளியிடப்பட்டது. குறித்த நிகழ்வு முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் ...

மேலும்..

ஒமந்தையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!

வவுனியா  ஒமந்தை, குஞ்சுக்குளம் கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (புதன்கிழமை) மதியம் விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஓமந்தை பொலிசார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே குறித்த மோட்டர் ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன. குஞ்சுக்குளம் பகுதியை ...

மேலும்..

கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் மோதல் – ஐவர் படுகாயம்!

கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று (புதன்கிழமை) அதிகாலையி​ல் குறித்த நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள், கந்தகாடு, சேனபுர ஆகிய மத்திய நிலையங்களில் போதை புனர்வாழ்வு ​நிலையத்தில் கொ​ரோனா ...

மேலும்..

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 515 PCR பரிசோதனை!

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 515 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம்  ஆயிரத்து 100  PCR பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்பிக்கவிற்கு அழைப்பாணை!

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2016ஆம் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவரை ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ...

மேலும்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக விண்ணப்பத்தினைப் பூரணப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பிடிஎப் ...

மேலும்..

ஆறு மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

ஆறு மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை (செவ்வாய்கிழமை) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ...

மேலும்..

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து இணக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கு ...

மேலும்..

விமல் வீரவன்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

விமல் வீரவன்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வேட்பாளரோ அல்லது ...

மேலும்..