பிரதான செய்திகள்

சுதுமலை சிந்மய பாரதி வித்தி. தேசிய மட்டத்தில் 2 ஆம் இடம்!

யாழ்ப்பாணம், சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலய மாணவர்களின் நாட்டார் இசை  (குழு ) தேசிய மட்ட (அகில இலங்கை) போட்டியில் இரண்டாம்  இடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது. பங்குபற்றிய மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசிரியைக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

மேலும்..

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி: 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ...

மேலும்..

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது!

”கடுமையான குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் கூட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வெளியே வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் ‘நாகராஜா அலெக்ஸ்‘ மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது” என ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி செயலாளர் நாயகமும் ...

மேலும்..

அரசியலமைப்பு சபையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை – சுமந்திரன்

அரசியலமைப்பு சபையில் 10 உறுப்பினர்களும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக உள்ளமையை இன்று நாடாளுமன்றில் கவனத்திற்கு சுமந்திரன் கொண்டுவந்திருந்தார். அரசியலமைப்பு சபை உறுப்பினருக்க நாடா ளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் முன்மொழியப்பட்ட போதும் இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார். இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் ...

மேலும்..

மக்களின் பிரதிநிதி என்று தொடர்ந்தும் கூறாமல் இராஜினாமா செய்யுங்கள் – ராஜபக்ஷர்களுக்கு சுமந்திரன் வலியுறுத்து

தவறை ஏற்றுக்கொண்டு மஹிந்த ராஜ்பக்ஷ உள்ளிட்டவர்களை இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நம்பிக்கையை இழந்த அவர்கள் தொடந்தும் மக்களின் சார்பாக நாடாளுமன்றில் இருப்பது தவறு என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் ...

மேலும்..

வெளிநாட்டுக் கொள்கை குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும்!

”வெளிநாட்டுக்  கொள்கை குறித்து இலங்கை அரசு அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும்” என தேசிய அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய ஏற்பட்டாளர் அன்ரனி யேசுதாசன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(21) யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..

ஷம்மியை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கில்லை : நீதிபதிகளை விமர்சிப்பதையிட்டு கவலையடைகிறேன் – ஜனாதிபதி

ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கில்லை என்றும் நீதிபதிகளை விமர்சிப்பதையிட்டு கவலையடைவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் குறிப்பிட்டார். பாராளுமன்ற சிறப்புரிமையில் மறைந்து கொண்டு நீதிபதிகளை குற்றஞ்சாட்ட வேண்டாம். நாம் எமது வேலைகளை செய்வோம், நீதிபதிகள் அவர்களின் வேலைகளை செய்யட்டும். பிரச்சினைகள் ...

மேலும்..

அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொக்கேயின், மரிஜுவானா போதைப்பொருட்கள் சிக்கின!

ஆறு கோடியே அறுபத்து ஒன்பது இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பொறுமதியான கொக்கேயின்  மற்றும் மரிஜுவானா போதைப்பொருள் என்பன நேற்று செவ்வாய்க்கிழமை (21) கைப்பற்றப்பட்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து விமான அஞ்சல் பொதியாக கம்பஹா பிரதேசத்தில் உள்ள முகவரி ஒன்றுக்கு இந்தப் போதைப்பொருள் முகவரியிடப்பட்டிருந்தது. இந்தப் பொதியை சுங்க ...

மேலும்..

சனத் நிஷாந்த சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள தடை

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு இரு வாரங்களுக்கு சபை நடவக்கைகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார். பொருளாதார பாதிப்புக்கு  பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு ...

மேலும்..

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், யாழ்ப்பாண மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக ...

மேலும்..

முதலாவது திருமணம் ஆகாத அழகு ராணியாக தமிழ் பெண்!

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக காரைதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா என்ற பெண்ணே மிஸ் யுனிவர்ஸ் தமிழ் 2023 பட்டம் வென்றுள்ளார். மேலும் பட்டம் வென்ற இவருக்கு சுமார் 350,000 ரூபா பரிசுத்தொகையும் ...

மேலும்..

வீதியில் காணப்பட்ட மழையில் வழுக்கி சுரங்கப் பாதையில் மோதியது லொறி!

மீரிகமவிலிருந்து தலவாக்கலை  அக்கரபத்தனைநோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியொன்று வீதியில் மழை நீரில் வழுக்கி சுரங்கப் பாதையில் மோதியுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகில் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பெய்த மழையின்போது ...

மேலும்..

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வை நீண்ட காலம் முன்னெடுக்க வேண்டி ஏற்படுமாம்! ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு

கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தைப் பார்வையிட்டதன் ...

மேலும்..

வெளிநாட்டில் பணிபுரியும் வீட்டுப்பணிப்பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் மனுஷ நாணயக்கார உத்தரவாதம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள வீட்டுப் பணிப்பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் எனக் கூக்குரலிடும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல இருந்த போதிலும், குறைந்த சம்பளத்துக்கு அடிமைகள் போன்று பணிபுரியும் உள்ளூர் வீட்டு வேலையாள்கள் தொடர்பில் குரல் எழுப்புவதில்லை. இதற்கான தீர்வை வழங்கி அவர்களைக் ...

மேலும்..

சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவம்: சம்பந்தப்பட்ட பொலிஸாரைக் கைது செய்க! சட்டத்தரணி மணிவண்ணன் வலியுறுத்து

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட  நாகராசா அலெக்ஸ் என்ற 23 வயது இளைஞன் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ...

மேலும்..