பிரதான செய்திகள்

தீயால் வீடுகளை இழந்த இராகலை மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட்டம்

இராகலை மத்திய பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான வீட்டு உரிமையைக் கோரி இராகலை நகரில் வீதிக்கு இறங்கி அமைதி பேரணியுடன் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். இராகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த 05.07.2023 அன்று 20 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பு திடீர் ...

மேலும்..

மலையக அரசியல்வாதிகள் விமர்சனங்களை விடுத்து மலையகத்தை அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும்! இராமேஷ்வரன் அழைப்பு

மலையக அரசியல் கட்சிகளைக்  குறை கூறுவதையும் விமர்சிப்பதையும் விட்டு, ஜனாதிபதியுடன் இணைந்து மலையக பிரதேசங்களை அபிவிருத்திசெய்ய முன்வர வேண்டும். அததுடன் மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்குவதற்காக 400 கோடி ரூபா ஒதுக்கியமைக்கு நன்றி தெரிவிக்கிறோம் என எம். ராமேஷ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

வரவு – செலவுத் திட்டத்தை பெரமுன ஆதரிக்கக்கூடாது! ஜி.எல். பீரிஸ் வற்புறுத்து

நாட்டில் அடுத்த வருடம்  புதிய வரிக் கொள்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளன. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலைகள் அதிகரித்து மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிக்கும். பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை. எனவே பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்ள ...

மேலும்..

வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்!

யாழ் – வட்டுக்கோட்டைப்  பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள்  நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த  இளைஞனின் இறுதி கிரியைகள் சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக மயானத்திற்கு எடுத்து ...

மேலும்..

புற்றுநோயாளர்களுக்கு தரமற்ற மருந்துகள்? : விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை!

மோசடி மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட தரமற்ற மருந்துகளால் பாதிக்கப்பட்ட 2000 இற்கும் மேற்பட்ட புற்றுநோயாளர்களின் நிலைமைகள் குறித்து சுகாதார தொழில்வல்லுனர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே சுகாதார தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் ...

மேலும்..

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு யாழில் திறந்து வைக்கப்படவுள்ளது !

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று  செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமாகவுள்ளது. இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் ...

மேலும்..

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் வார நிகழ்வு ஆரம்பம்

 

மேலும்..

சிறுவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் விரைவில் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தேவை : ஐ.நா.சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக்

சுற்றுச்சூழல் பேரழிவுகள் உள்ளிட்ட ஆபத்துக்களால் சிறுவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் விரைவான வேகத்தில் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய ...

மேலும்..

நீதிமன்ற தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டவர்களால் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் – சந்திரிகா

நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிக முக்கியத்துவமுடையதாகும். குறித்த வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் உள்நாட்டில் மாத்திரமின்றி, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவற்றை மீட்டு அரசுடைமையாக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ...

மேலும்..

ரயிலிலிருந்து வீழ்ந்து மூளைச்சாவடைந்த பல்கலைக்கழக மாணவனின் உடலுறுப்புக்களை தானமாக வழங்க முன்வந்த பெற்றோர்!

மூளைச்சாவடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுப்பதற்கு அவரது பெற்றோர் தீர்மானித்துள்ளனர். வெயாங்கொடை மாலிகதென்ன பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உறுப்புகளே இவ்வாறு தானமாக வழங்கப்படவுள்ளன. 23 வயதான இசங்க ரணசிங்க என்ற இந்தப் பல்கலை மாணவன் ரயிலில் பயணித்தபோது ...

மேலும்..

இலங்கையுடனான பங்காளிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிக்கும் – சமந்தா பவர்

இலங்கையுடனான பங்காளிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிப்பதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முய்ஸு பதவியேற்பு நிகழ்விற்காக மாலைதீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ...

மேலும்..

எம்.பிக்கள் மீது பாயும் புதிய சட்டம்!

“நாடாளுமன்ற உறுப்பினர்களின் அநாகரிகமான செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக”  நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” ...

மேலும்..

பிரிவினையைத் தூண்டுபவர்களைக் கண்டிக்க முஸ்லிம் சமூக தலைவர்கள் முன்வரவேண்டும்!

”சமூகங்களுக்கு இடையில் பிரிவை உண்டாக்குவோர்களை கண்டிக்க முஸ்லிம் சமூகத்  தலைவர்கள் முன்வரவேண்டும்” என  கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த ...

மேலும்..

04 மாதங்களில் வைத்தியசாலையை கட்டிமுடித்த செந்தில் தொண்டமான்!

அம்பாறை மாவட்ட கோனோகொல்ல பொதுமக்கள், உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க மற்றும் வீரசிங்கம் ஆகியோரால் வைத்தியசாலை நிர்மாணித்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த வேண்டுகோளுக்கு இணங்க 34 மில்லியன் ரூபா பெறுமதியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கோனோகொல்ல ...

மேலும்..

யாழில் சுமார் 3கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா சிக்கியது!

யாழ்ப்பாணம்,  காரைநகரிலுள்ள பற்றைக் காடொன்றில் இருந்து, இன்று(20) அதிகாலை 101 கிலோ 750 கிராம்  நிறைகொண்ட சுமார் 3கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினருக்கு கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே குறித்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது குறித்த ...

மேலும்..