பிரதான செய்திகள்

இலங்கையில் சிறுவயதிலேயே கர்ப்பமாகும் இரண்டு இலட்சம் பேர் : கீதா குமாரசிங்க

2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறுவயதிலேயே கர்பமாவதாகவும் அவர்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மகளீர், மற்றும் சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் ...

மேலும்..

யாழில் மாற்றுப் பாலினத்தவர்களின் விழிப்புணர்வு நடைபவணி

மாற்றுப் பாலினத்தவரின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. மாற்றுப் பாலினத்தவர்களின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே குறித்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாற்றுப் பாலினத்தவர்களாக வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் எனவும், அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம் ...

மேலும்..

சிவனொளி பாதமலை கழிவுகளை அகற்ற வருடாந்தம் 2 மில்லியன் ரூபா செலவு

சிவனொளி பாத மலையை வழிபட வரும் பக்தர்களால் எரியப்படும் பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு பணம் செலவழிப்பதாகவும், நுவரெலியா மாவட்ட செயலகத்தினால் மட்டும் 2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாகவும் நுவரெலியா ...

மேலும்..

யாழில் வரலாற்று சாதனை படைத்த மாணவி கௌரவிப்பு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா 196 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். குறித்த மாணவியை கௌரவிக்கும் நிகழ்வானது மக்கள் வங்கி யாழ் பல்கலைக்கழக கிளையினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை ...

மேலும்..

பாரவூர்தியுடன் இ.போ.ச. பஸ் வவுனியாவில் மோதி விபத்து! மூவர் காயம்

வவுனியா, ஓமந்தையில் பாரவூர்த்தியுடன் இ.போ.சபை பஸ் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது - யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பாரவூர்த்தி ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரச்சினை தொடர்பில் அனைத்து தரப்புடனும் பேச்சு! அமைச்சர் டிரான் தகவல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனப் பிரச்சினை தொடர்பில் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்புடனும் அமைச்சரவை உபகுழு பேச்சுக்களை நடத்துமென்று அதன் உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் ...

மேலும்..

அமைச்சர் ரொஷானின் பாதுகாப்பு அதிகரிப்பு: 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில்!

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். அமைச்சர் ரொஷான் ரணசிங்க அண்மைக்காலமாக தனது பாதுகாப்பு தொடர்பில் விசேட கரிசனைகளை வெளியிட்டதோடு, கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்திலும் விசேட கூற்று ஒன்றின் ...

மேலும்..

எனக்கு எதிரான பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பேன் : ரஞ்சித் பண்டார எம்பி!

எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தாம் நாடாளுமன்றத்தில் இல்லாத நேரத்தில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் எம்.பி என்ற வகையில் எனது சிறப்புரிமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூல ...

மேலும்..

ரணில் புகழ் பாடும் அமைச்சர் டக்ளஸ்!

வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமன்றி வல்லரசு நாடுகளும் கூட பொருளாதார வீழ்ச்சி கண்ட வேளை வளர்ந்து வரும் நாடாகிய இலங்கைத் தீவை தன் ஆளுமையால் தற்காத்தவர் ஜனாதிபதிபதி ரணில் விக்ரமசிங்க என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு நஷீர் அஹமட்டை நியமிக்க முடிவு? வெளியான பரபரப்புத் தகவல்

கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்து வரும் செந்தில் தொண்டமானை நீக்கி அண்மையில் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் நஷீர் அஹமட்டுக்கு அப்பதவியை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று சிங்கள வார இதழ் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இது ...

மேலும்..

ராஜபக்ஷவினர் யுத்த வெற்றியை பயன்படுத்திக்கொண்டு செய்த விடயங்களே நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அம்பலமாகியுள்ளன – தலதா அத்துக்கோரள

யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்திக்கொண்டு ராஜபக்ஷவினர் நாட்டில் மேற்கொண்டுவந்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தற்போது அம்பலமாகி இருக்கிறது. அத்துடன் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அதனை வீதியில் சொல்லிக்கொண்டிருக்காமல் நீதிமன்றத்துக்கு சென்று தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தலதா ...

மேலும்..

பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்பதை நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது – மைத்திரி

பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளது. நீதிமன்றத்துக்கு எமது கௌரவத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தீர்ப்பு வழங்கிய நீதியரசர்களை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணை செய்ய எவருக்கும் தகைமை இல்லை. பாராளுமன்ற தெரிவுக்குழு தோல்வியடைந்துள்ளது.ஆகவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்காமல் ...

மேலும்..

விடுதலைபோராட்ட திரைப்படங்கள், நாடகங்களில் நடித்து பிரபலமான மாணிக்கம் ஏரம்பு காலமானார்!

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றில் தனது கலைப் பங்களிப்பை வழங்கிய மாணிக்கம் ஏரம்பு சனிக்கிழமை  அதிகாலையில் வட்டுக்கோட்டை துணவி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 23.04.1942 அன்று பிறந்த இவர் ...

மேலும்..

வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு நிபுணத்துவ அறிவுவழங்க வியட்நாம் இணக்கம்

முன்மொழியப்பட்டுள்ள புதிய முதலீட்டு சட்டமூலத்தை வரைவதிலும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதிலும் நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கலாநிதி புய் வான் கிம் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பின்போதே ...

மேலும்..

இலங்கையின் அரசியல் நிலைமை தொடர்பில் ஜே.வி.பி. – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தற்போது எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் வெள்ளிக்கிழமை இலங்கைக்கான இந்திய ...

மேலும்..