பிரதான செய்திகள்

பிக்குகள் ஆதரவைபெறும் சூழ்ச்சியில் தமிpழ்ப் பிரிவினைவாதிகள்; மும்முரம்! கலாநிதி குணதாச அமரசேகர கூறுகிறார்

தமிழ்ப் பிரிவினைவாதிகள் தற்போது பிக்குகளின் ஆதரவை பெறும் சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகளே இந்நாட்டில் ஒற்றையாட்சியின் காவலர்களாக இருந்துவருகின்றனர். இலங்கை சமஷ்டி நாடாவது அவர்களின் அழுத்தத்தால்தான் தடுக்கப்பட்டு வருகின்றது ...

மேலும்..

அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்துவந்த பீடி இலைகள் மீட்பு

அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த நிலையில், பீடி  இலைகளை கடற்படையினர் வெள்ளிக்கிழைமை மீட்டுள்ளனர். கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போதே மூன்று பொதிகளில் சுமார் 118 கிலோகிராம் மற்றும் 120 கிலோ கிராம் எடையுள்ள பீடி இலைகளைக் கைப்பற்றியுள்ளனர். கடற்படை நடவடிக்கைகள் காரணமாக வர்த்தகர்கள் அதனை கடலில் ...

மேலும்..

தமிழ்ப் பெண் வைத்தியர் நோர்வேயில் படுகொலை!

நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நோர்வேயின் எல்வெரும் என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் புத்தாண்டு தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் உயிரிழந்த ...

மேலும்..

பொருளாதார வளர்ச்சிக்கு மதநல்லிணக்கம் அவசியம் மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பங்கு மகத்தானது! ஜனாதிபதி ரணில் திட்டவட்டம்

பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது எனவும் வடக்கில் யுத்தத்தால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாகவும்  மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் பாரியதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ்.மாவட்ட சர்வ ...

மேலும்..

யாழ். மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன்!  வட மாகாண ஆளுநர் சாள்ஸ் வாக்குறுதி

யாழ். மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்துக்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்கான ...

மேலும்..

கட்டைக்காட்டில் 55 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 55 கிலோ பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. கட்டைக்காட்டில் அண்மைக்காலமாக போதைப்பொருள்களை ஒழிக்கும் நோக்கிலான விசேட சுற்றிவளைப்புக்கள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கட்டைக்காடு காட்டுப் பகுதிக்குள் போதைப்பொருள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடற்படையினருக்கு புலனாய்வுத் ...

மேலும்..

மடு, துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்றுவதற்கு ஏற்பாடு! வடக்கு ஆளுநர் சாள்ஸ் தகவல்

மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - கடந்த முறை உயர்தரத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை ...

மேலும்..

கிழக்குமாகாண தபாலக நிர்வாக கட்டட தொகுதி மட்டக்களப்பில் அமைச்சர் பந்துலவினால் திறப்பு!

கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு சுமார் 45 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 5 மாடிகள் கொண்ட கிழக்கு மாகாண தபாலக நிர்வாக கட்டடத் தொகுதி சனிக்கிழமை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மாகாண பிரதி அஞ்சல்மா ...

மேலும்..

வடக்கு மாகாணத்திலுள்ள வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு இரு மாதங்களில் தீர்வு! என்கிறார் ஜனாதிபதி ரணில்

வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில் வடக்கிற்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், வடமாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு ...

மேலும்..

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படுத்த திட்டம் யாழில் ஜனாதிபதி ரணில் உறுதி

புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் யாழ்.பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ ...

மேலும்..

அகிலத்திருநாயகியை நேரில் சந்தித்து ஜனாதிபதி பாராட்டு

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22 ஆவது 'மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்' போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி  கௌரவித்து  மதிப்பளித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வயது என்பது வெறும் ...

மேலும்..

ஊழல் வாதிகளைப் பாதுகாக்கும் வரியாக பெறுமதிசேர்வரி உள்ளது!  எதிர்க்கட்சி தலைவர் சஜித் விசனம்

பெறுமதி சேர் வரி ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் வரியாகும். கொள்ளையடித்தவர்களிடமிருந்து பணத்தை மீட்பதற்குப் பதிலாக, அவர்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றனர். எனவே இந்த வற் வரியை ஊழல் நிறைந்த வரி என்று அழைக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டார். பிரபஞ்சம் தகவல் ...

மேலும்..

காணாமல்போனோரின் தாய்மாரை கைதுசெய்வதால் தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வெல்லமுடியாதாம்! அரசைக்; கண்டிக்கிறார் அம்பிகா சற்குணநாதன்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் போராட்டத்தைத் தடுப்பதன் மூலம் யுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான தன்முனைப்பைக் காண்பிக்கமுடியாது எனவும், தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கமுடியாது எனவும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினர் அம்பிகா ...

மேலும்..

தசாப்தங்கள் மூன்று கடந்தாலும் சாவகச்சேரி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர்!

சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் சாவகச்சேரி அம்பிகா மருந்தகத்தின் உரிமையாளருமான அமரர் சங்கரப்;பிள்;ளை நமசிவாயத்தின் 30 ஆவது ஆண்டு நினைவு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தில் அமரர் நமசிவாயம் நினைவு மண்டபத்தில் லயன் வ.சிறிபிரகாஸ் தலைமையில் இன்று (சனிக்கிழமை) ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலிடம் “மன்னார் சிவபூமி” நூலை கையளித்தார் மறவன்புலவு சச்சிதானந்தன்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள மத தலைவர்களை சந்திக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு சென்ற ஜனாதிபதியை சிவசேனை அமைப்பின் தலைவரும் எழுத்தாளருமான மறவன்புலவு சச்சிதானந்தன் வரவேற்றார். ஜனாதிபதியை பொன்னாடை போர்த்தி வரவேற்ற சிவசேனையின் இலங்கை தலைவர் சச்சிதானந்தன் “மன்னார் சிவபூமி” ...

மேலும்..