பிரதான செய்திகள்

அரசின் வருமான வரி அறவீடு வயது அடிப்படையில் கூடாது! காமினி வலேகொட

வயது அடிப்படையில் வருமான வரி அறவிட முடியாது வருமானத்தின் அடிப்படையில் வரி அறவிடப்பட வேண்டும் என தேசிய வரி வருமானச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக நிதியமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தமானியை  நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினால் இதுவரை பதிவு செய்யப்பட்ட ...

மேலும்..

பொருள்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசு சந்தைக்கு சென்று ஆராய வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித்  கோரிக்கை

எந்தவித மதிப்பீட்டு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலே அரசாங்கம் வற்வரி அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் - அரசாங்கம் ...

மேலும்..

விவசாயத் துறை மறுமலர்ச்சியை நாட்டில் ஏற்படுத்த நடவடிக்கை!

நாட்டில் விவசாயத் துறையின் மறுமலர்ச்சியைத் தொடர்வதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் முகவராண்மை மற்றும் கமத்தொழில் அமைச்சு ஆகியன பங்குதாரர்களாகின்றன. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய ...

மேலும்..

225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சமிந்த விஜேசிறி காட்டிக் கொடுத்தார்! சாடுகின்றார் மஹிந்தானந்த

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க 900 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசிப்பதற்கு சமிந்த  விஜேசிறி 225 உறுப்பினர்களையும் காட்டிக் கொடுத்துள்ளார். இவரின் கருத்துக்களால் மக்கள் பிரதிநிதிகள் மலினப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே விசேட கவனம் செலுத்துங்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ...

மேலும்..

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக மீண்டும் கௌசல்ய?

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை சங்கத்தின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌல்ய நவரடண தலைமைப்பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேநேரம், செயலாளர் பதவிக்கு சட்டத்தரணி ...

மேலும்..

நாட்டின் வங்குரோத்துக்கு காரணமானவர்களுக்கு இதுவரைக்கும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சஜித் போட்டுத் தாக்கு

நாட்டை வங்குரோத்தாகுவதற்கு காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியோ அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறி இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன எனக் கேட்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

மஹிந்தானந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யான ஒன்றே! மறுக்கிறார் சரத் பொன்சேகா

900 லட்சம் ரூபா பெற்றுக்கொண்டு சமிந்த விஜேசிறி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகக் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. பணத்துக்காக அவர் அரசியல் செய்யவில்லை. சேறு பூசல்களுக்காகவே பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு திட்டமிட்டபடி 27, 28 இல்; நடைபெறும்! அடித்துக்கூறுகிறார் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாடு திட்டமிட்டபடி எதிர்வரும் 27,28 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் அறிவித்துள்ளார். இதேநேரம், கட்சித்தலைமைக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும், கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட ...

மேலும்..

மாற்றுக்கருத்துடையவர்களை அடக்கவே வருகிறது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்! விஜித்த ஹேரத் தெரிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் எப்போதும் மாற்று கருத்துடைய அரசியல்வாதிகளை அடக்குவதற்கே பயன்படுத்தி இருக்கிறது. அதனால்தான் இந்தச் சட்டம் தொடர்பில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டமூலத்தில் பயங்கரமான பல விடயங்கள் இருக்கின்றன என தேசிய மக்கள் சக்தி  உறுப்பினர் ...

மேலும்..

இஸ்ரேலைப் பாதுகாக்கக் கடற்படையை அனுப்புவதை நிறுத்தி கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுக!  ஹக்கீம் வலியுறுத்து

செங்கடலில் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காகக் கடற்படையை அங்கு அனுப்புவதை விட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த ஜனாதிபதி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

36,385 பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை கல்வி அமைச்சர் சுசில் தகவல்

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 36 ஆயிரத்து 385 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன்  14,385 மாகாண மட்ட ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பிலும் மேலும் 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பது தொடர்பிலும் நீதிமன்றத்தில் ...

மேலும்..

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடை

மண் சரிவு காரணமாக பதுளை - கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஹாலி-எல 7 ஆவது மைல் கட்டை பகுதிக்கு அருகில் செவ்வாய்க்கிழமை இரவு  இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது பதுளையில் இருந்து உடுவர ...

மேலும்..

தொழிற்சங்க நடவடிக்கையால் சுகாதாரசேவைகள் ஸ்தம்பிதம்!

அரச தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் 48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் பல்வேறு சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி  நாடளாவியரீதியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள்  இணைந்த சுகாதார ...

மேலும்..

யாழில் 23 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் முடிவு!

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 ஏக்கர் காணிகளையே விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வலி. வடக்கில் சுமார் 3 ஆயிரம் ...

மேலும்..

பெண்ணொருவரை கொலை செய்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பெண்ணொருவரை  கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றதாக சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் செவ்வாய்க்கிழமை தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..