இந்தியச் செய்திகள்

காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு பிச்சை போடுகிறதா காவிரிமேலாண்மை ஆணையம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

இந்திய அரசு நீராற்றல் துறையின் முழுநேரத் தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவராகவும் உள்ள எஸ்.கே. ஹல்தார் தலைமையில் 27.09.2021 அன்று டெல்லியில் காவிரி மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. பதினான்காவது முறையாக நடந்த இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ...

மேலும்..

இந்திய நகரங்களில் பாடவுள்ள இலங்கைப் பாடகி யொஹானி…

‘மெனிக்கே மகே ஹித்தே’ பாடல் மூலம், உலகப் புகழ்பெற்ற இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா இந்தியாவில் நேரடி இசை நிகழ்ச்சியில் பாடவுள்ளார். செப்டெம்பர் 30, ஒக்டோபர் 3 ஆம் திகதிகளில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. புதுடெல்லிக்கு அருகிலுள்ள, ஹரியானா குருகிராம் நகரிலுள்ள ...

மேலும்..

இந்தியாவில் புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28 ஆயிரத்து 326 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 52 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை ...

மேலும்..

இந்தியாவில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 24 ஆயிரத்து 419 ஆக ...

மேலும்..

இந்தியாவில் 30 இற்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் கண்டறிவு.

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 37 மருந்துகள் தரமற்றவையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்டுள்ள மருந்துகளில் பெரும்பாலானவை உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ...

மேலும்..

ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில், நீட் எதிர்ப்பு கருத்து அரங்கம் வைகோ அறிக்கை.

மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை, ஒன்றிய அரசு திணித்த நாள் முதல், தமிழ்நாட்டில் அரியலுர் மாணவி அனிதா முதல் சௌந்தர்யா வரை 16 மாணவக் கண்மணிகள், தங்கள் உயிர்களைப் போக்கிக் கொண்டுள்ளனர். எனவே, நீட் தேர்வு கூடாது என, திராவிட முன்னேற்றக் ...

மேலும்..

இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி:தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டேட் வங்கியின் சமூக நீதிக்கு எதிரான இத்தகைய போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்வு ...

மேலும்..

அமெரிக்கா புறப்பட்டு சென்றார் மோடி!

ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி  (புதன்கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘இந்திய-அமெரிக்க நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், மண்டல மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இருநாட்டு ...

மேலும்..

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் 77 ஆவது பிறந்தநாள் -தலைவர்கள் வாழ்த்து.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் 77 ஆவது பிறந்தநாளான இன்று 22.09.2021, தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் இரா.முத்தரசன், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மே-17 ...

மேலும்..

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார் வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாளை 22.09.2021 காலை 10 மணி அளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

மேலும்..

பிற்படுத்தப்பட்டோர் வீரவன்னியராஜா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு.

பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளரும், பாஜக பிரமுகருமான வீரவன்னியராஜா நெய்வேலிக்கு வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை என்எல்சி விருந்தினர் மாளிகையில் நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார். அம்மனுவில கூறியிருப்பதாவது: என்எல்சி நிறுவன அனல்மின் ...

மேலும்..

தலைமைக் கழக அறிவிப்பு ஊரக உள்ளாட்சித் தேர்தல்.

அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெறும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகப் பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தொடர்புடைய 9 மாவட்டச் செயலாளர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அனைத்து ...

மேலும்..

மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா…

பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாளை 15.09.2021 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு ...

மேலும்..

மாணவச் செல்வங்களே, நம்பிக்கை இழக்காதீர்கள்; வாழ்ந்து காட்டுங்கள் வைகோ வேண்டுகோள்…

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (NEET) நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியைச் செயல்படுத்த முதல் அடியை ...

மேலும்..

இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை – திருச்சியில் இராதாகிருஷ்ணன் எம்.பி பேட்டி…

(க.கிஷாந்தன்) இலங்கை தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கான உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை என மலையக மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் இந்தியா தமிழகத்தில் திருச்சிக்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் கலந்து கொண்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது, தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது: இலங்கையில் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டு ஒராண்டு காலமான நிலையில் பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள் மக்கள் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லை. அதேநேரம் மக்கள் எதிர்பார்த்த விருப்பங்கள் நிறைவேறவில்லை. தமிழக மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களின் உரிமைகள், விருப்பங்கள் மற்றும் தாமாக சுதந்திரமாக நடமாடும் உரிமைகள்  நிறைவேறவில்லை. புதிதாக வந்துள்ள தமிழக முதல்வர் இலங்கை மறுவாழ்வு இல்லம் என்று, இலங்கை அகதிகள் முகாமை பெயர் மாற்றம் செய்து அடிப்படை வசதிகள் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற  நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி. இலங்கை அகதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது பாராட்டுக்குரிய விஷயம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர். இலங்கையில் 10வருடமாக போர் பிரச்சனைகள் இல்லை, மறுவாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  விரும்பிய வடகிழக்கு தமிழர்கள் இலங்கையில் மீண்டும் குடியேறுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகிறது. 30-வருடங்களாக தமிழகத்தில் வந்து தங்கியுள்ள மலையக தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.  மலையக பகுதிக்கு மீண்டும் வேலை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை, தோட்டத்தில் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும், சொந்த காணி கிடையாது. எனவே தமிழக முதல்வர் அவர்கள் இதனை கருத்தில் கொண்டு மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழக அரசும் இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் பொருளாதார தட்டுப்பாடு நிலவும் சூழலில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தமிழ் மற்றும் இலங்கை மக்களுக்கு விரக்தியான அரசாக தற்போது புதிய அரசு உள்ளது.  மூன்று ஆண்டுகளுக்கு கழித்தே விரக்தி ஏற்படும் நிலையில் புதிய அரசு மீது புத்த மக்கள், மத குருமார்கள் என அனைவரும் விரக்த்தியில் இருப்பதை காணமுடிகிறது. இலங்கையில் சீனா தங்களது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிக முதலீடு செய்து இருப்பதன் மூலம் காண முடிகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் இரட்டை குடியுரிமை வழங்கும் பட்சத்தில் பாதுகாப்பு கருதி இதுவரையும் வழங்கப்படாத இரட்டை குடியுரிமையை இந்திய அரசும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய பாஜக அரசு இலங்கை நட்புறவை அதிகம் பேணுகிறது, கடந்த காலங்களில் இந்த நட்புறவு அதிகமாக இருந்தாலும் சில நடவடிக்கைகள் பிரச்சினையாக இருந்தது. ராஜீவ்காந்தி கொலை செய்ததாகவும் இருந்ததால் அதன் அடிப்படையில் போராளிகள் இயக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம். இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் வருவதற்கு மிக மிக வாய்ப்பு குறைவு அதற்கான சட்ட திட்டங்கள் அதிகம் ஏற்படுத்தியுள்ளனர். புனர்வாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. உலகம் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு போராளி குழுவும் ஒரு நாட்டில் தலை எடுப்பது கஷ்டம் என்றார். தமிழகத்தின் ஆட்சி மாற்றம் இலங்கை தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதை காண முடிகிறது, சுற்றுலாவை நம்பியுள்ள இலங்கையில் படுமோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால்தான் பொருளாதார வீழ்ச்சி காணப்படுகிறது. அதனால்தான் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது 6மாத காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறும். கொரோனா முடிவுக்கு வந்த பின்னர் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கூட பல்வேறு திட்டங்கள் இலங்கைக்கு செய்யப்பட்டுள்ளது அமைச்சராக செங்கோட்டையன் இருந்த காலகட்டத்தில், தற்போது மீண்டும் திமுக ஆட்சியின் ஊடாக அந்த நிலை தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும்..