இந்தியச் செய்திகள்

நவராத்திரி வழிபாட்டுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் லொறி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சத்தீஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர், நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டுக்காக, சொகுசு கார் ஒன்றில் டொன்கர்கரில் ...

மேலும்..

தலைவர் பிரபாகரன் நலமாக உள்ளார் பழ.நெடுமாறன் புதிய தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் இறுதி கட்ட போரில் கொல்லப்படவில்லையென தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், இலங்கை தமிழர்கள் ...

மேலும்..

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜினாமா?

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்கள், தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து மீ டு என்ற ஹேஷ்டேகில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ...

மேலும்..

சமூக வலைத்தளங்களை அதிரவைத்த புகைப்படம்; உண்மையில் நடந்தது என்ன?

திருமணத்தின்போது திடீரென்று மணமகன் எழுந்து ஓடியதால் அவரது தந்தை தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது. இந்த விசித்திர சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. தாலி கட்டியவரின் வயது அறுபத்தைந்து என்றும் மணப்பெண்ணின் வயது 21 என்றும் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன. இது ...

மேலும்..

சைக்கிளில் வேகமாக சென்றமை ஹெல்மெட் அணியாமை இளைஞனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த பொலிஸார்!

சைக்கிளில் வேகமாக சென்றதாகவும், ஹெல்மெட் அணியாததாலும் இளைஞர் ஒருவரிடம் போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காசிம் என்ற இளைஞர் கேரளாவின் கும்பாலாவில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ...

மேலும்..

தாயின் உடலத்தில் அமர்ந்து மரணப் பூஜை; தமிழ்நாட்டைப் பதற வைத்த அகோரி.!

திருவெறும்பூர் அருகே அகோரி ஒருவர் இறந்த தனது தாய்க்கு விசித்திரமான முறையில் இறுதிச் சடங்கு செய்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சி பெற்ற ...

மேலும்..

மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினம் இன்று

மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, இன்று டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அகிம்சை வழியில் போராடியவர் மகாத்மா ...

மேலும்..

ஈழத் தமிழர் பிரச்சினைகள் விடயத்தில் துரோகம்…

ஈழத் தமிழர் பிரச்சினைகள் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் துரோகம் இழைத்திருப்பதாக, இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தமிழக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இறுதி யுத்தக் காலப்பகுதியில் திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து ஈழத் ...

மேலும்..

கண் மருத்துவத்தில் சாதனை படைத்த தமிழனுக்கு கூகுள் கொடுத்த கௌரவம்!

கண் மருத்துவத்தில் உலகளாவிய சாதனை படைத்த தமிழர் டாக்டர் கோவிந்தப்ப வெங்கடசாமி என்ற டாக்டர் ஜி. வெங்கடசாமி (Dr.G. Venkatasamy) அவர்களின் பிறந்த தினம் இன்று. அவரது பிறந்த நாளை முன்னிட்டு டூடுள் வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்ந்துள்ளது உலகளவில் அதிக ...

மேலும்..

பாகிஸ்தானை நோக்கி இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்: 2 ஆண்டுகள் நிறைவு!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி இன்றுடன் (சனிக்கிழமை) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை நினைவு கூறும் வகையில் அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் கண்காட்சி ஒன்றை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், உயிர்நீத்த ராணுவ வீரர்கள் நாட்டுக்கு செய்த ...

மேலும்..

வயிற்றில் கத்தரிக்கோலைச் சுமந்து ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த நபர்; என்ன நடந்தது தெரியுமா?

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நடிப்பில் வெளியான நகைச்சுவை காட்சி ஒன்றில் அவர் மருத்துவராக நடித்திருப்பார். அப்போது அவரிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளி ஒருவரின் வயிற்றில் தவறுதலாக ஹெல்மெட்டை வைத்து அறுவை சிகிச்சை செய்துவிடுவார். அதற்கு பின் பாதிக்கப்பட்ட நோயாளியின் தரப்பினர் வடிவேலுவை ...

மேலும்..

ஐ.நாவின் சுற்றுச்சூழல் விருது நரேந்திர மோடிக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையினால் சுற்றுச்சூழல் விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படவுள்ளதாக ஐ.நாவின் சுற்றுச்சூழல் அமைப்பு அறிவித்துள்ளது. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழிநடத்துவதற்காகவும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என உறுதியேற்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு ஐ.நாவின் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றியதற்காக உலகளவில் 6 பேர் ...

மேலும்..

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் – உச்ச நீதிதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

உலக பிரசித்தி பெற்ற கேரள - சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் வழிபாட்டிற்காக அனுமதிக்க வேண்டும். பாலின பாகுபாடுகளை காரணம் காட்டி பெண்களை கோவிலுக்குள்ளாக அனுமதிக்க மறுப்பதென்பது பெண் தெய்வங்களை வழிபடும் இந்த தேசத்தில் வாழும் பெண்களுக்கு இழைக்கப்படும் ...

மேலும்..

பெண்ணின் வயிற்றில் குழந்தையாக அவதரித்த நாக பாம்பு? பிரசவ நேரத்தை எதிர்பார்த்த திக் திக் நிமிடங்கள்!

ஒரு பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பே குழந்தையாக அவதரித்து இருக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக பட்டிதொட்டியெல்லாம் காட்டுத்தீயாக பரவியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த செய்தி இறுதி தருணங்களை அடைந்து அனைவரையும் திக் திக் மனநிலைக்கு அழைத்து சென்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது ...

மேலும்..

தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் கைது:- சுங்கத்ததுறை அதிகாரிகள் நடவடிக்கை…

தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக  இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் சுங்கத்ததுறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்படவர்களிடம் அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.  தங்கச்சி மடம் கடற்பகுதியில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு அகதிகள் செல்லவுள்ளதாக இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய ...

மேலும்..