இலங்கை செய்திகள்

உலகத் தமிழர் பேரவையினர் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

நாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவரான சுரேன் சுரேந்திரன் தலைமையிலான குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இதனையடுத்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட உலகத் தமிழர் பேரவையின் தலைவரான ...

மேலும்..

நல்லிணக்கத்துக்கான சுயாதீன ஆணைக்குழு நிறுவ அரசு முடிவு!

நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முன்மொழியப்பட்ட ஆணைக்குழு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படவுள்ளதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து குறித்த சட்டமூலம் தற்போது ...

மேலும்..

இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்களாலேயே இது கையளிக்கப்பட்டது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை ...

மேலும்..

சர்வதேசத்துக்கு அரசு வழங்கிய வாக்குறுதிகளை மீறி விட்டதாம்! பீரிஸ் குற்றச்சாட்டு

புதிய சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்ப் போவதில்லை என சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறி விட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறி, தமக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ...

மேலும்..

சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி ஆரம்பம்!

யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தால் நடத்தப்படும், 'யாழ் சர்வதேச சதுரங்க போட்டி 2023' வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலஸில் நடைபெறும் போட்டியின் ...

மேலும்..

மன்னார் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய திருவிழா

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா திருப்பலி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து திருச்சொரூப பணியும்,அதனைத்தொடர்ந்து ஆசியும் மன்னார் ...

மேலும்..

யாழ். மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்துக்கு சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் குடிநீர் வசதி!

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தின் குடிதண்ணீர் விநியோக  சீரற்ற செயற்பாட்டைச் சீர்செய்வதற்காக கழக உறுப்பினர் லயன் எஸ்.சசீந்திரராஜாவால் சீர்செய்வதற்கான நிதி அனுசரணை காசோலையாக வழங்கப்பட்டது. வலி.வடக்கின் மீள்குடியேற்றப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலை மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம். அந்தப் பிரதேசத்தில் ...

மேலும்..

ஜனாதிபதி நல்லிணக்கம் குறித்து பேசுகின்றார் அரசாங்கம் வேறு விதத்தில் செயற்படுகின்றது நினைவேந்தல் கைது குறித்து மனித உரிமை கண்காணிப்பகம்

1983 முதல் 2009 வரையான உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக இலங்கை  அதிகாரிகள் நாட்டின் துஸ்பிரயோக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 9 தமிழர்களை தடுத்துவைத்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தனது சர்வதேச சகாக்கள், வர்த்தக ...

மேலும்..

முஸ்லிம் பள்ளிவாசல்களை புதிதாக பதிவுசெய்வதில் பிரச்சினை இல்லை! அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பகிரங்கம்

பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரச்சினை இல்லை. அரபுக் கல்லூரி தொடர்பான ஆவணங்களுக்கு பாதுகாப்பு அமைச்சால் அனுமதி கிடைக்கப்பெற்றால் பதிவு செய்ய முடியும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். நாடளுமன்றத்தில் ...

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு!

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ...

மேலும்..

‘உத்தர‘ கடற்படைத் தள வைத்தியசாலையில் இரத்த தானம்!

இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காங்கேசன்துறையில் “உத்தர” கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட 195 கடற்படையினர் இரத்த தானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஈ-60 கொள்கை ஜனவரி மாதம் முதல் அமுல் – விவசாய அமைச்சர்

நாட்டில் உற்பத்தி செய்யப்படும், தேயிலை கொழுந்தின் தரத்தை உறுதிப்படுத்தி கொள்வதற்காக ஈ-60 கொள்கை ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினர்களுக்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். ஈ-60 கொள்கை என்பது, தேயிலை உற்பத்திக்கு ...

மேலும்..

தெல்லிப்பளை தாக்குதல் சம்பவம்: யாழில் இதுபோன்ற இனிமேல் இடம்பெறாது!

”அண்மையில் இடம்பெற்ற தெல்லிப்பளைத்  தாக்குதல் சம்பவம் போன்று இனி யாழ் மாவட்டத்தில் எந்தவொரு தாக்குதல் சம்பவமும் நடைபெற நாம்  அனுமதிக்கமாட்டோம்” என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் கடந்த திங்கட்கிழமை ...

மேலும்..

சர்வதேச நீர் மாநாடு – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

சர்வதேச நீர் மாநாடு எதிவரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நீர் மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மையத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து ...

மேலும்..

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு – 11 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கோட்டை முனை மற்றும் கல்லடி ஆகிய பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் நேற்று மாலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்கள் ...

மேலும்..