இலங்கை செய்திகள்

முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் மஹிந்த! ரோஹித அபேகுணவர்தன அறிவிப்பு

ராஜபக்ஷர்களின் எழுச்சியைக் கண்டு எதிரணியினர் அச்சமடைந்துள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிடுவார் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் ...

மேலும்..

இலகு ரயில் திட்டத்தை விரைவில் தொடங்க ஜப்பானுடன் பேச்சுகள்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய இந்தத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு ...

மேலும்..

தேசபந்து தென்னகோன் உட்பட 4 அதிகாரிகளை நஷ்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

  பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகளை இவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து 2 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாகச் ...

மேலும்..

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு சபைக்கு சுகாதார அமைச்சர் திடீரென விஜயம்!

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபை மற்றும் தேசிய மருந்து தர பாதுகாப்பு ஆணையகம் என்பவற்றைக் கண்காணிப்பதற்காக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்காக துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை ...

மேலும்..

நடிகை ரம்பா யாழ். விஜயம்!

பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட வழிபாடுகளிலும்  ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் ...

மேலும்..

மாதவனை பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்புகள்!

மட்டக்களப்பு, மயலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ந்து திருடிவருவபர்கள் மற்றும் அவற்றை கொலை செய்பவர்களைக் கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் 50 பேர் கொண்ட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை ...

மேலும்..

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள கோரிக்கை!

வற் வரி அதிகரிப்புடன், ஜனவரி மாதத்தில் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, இது தொடர்பாக எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ...

மேலும்..

பற்றியெரிந்த வர்த்தக நிலையம்; யாழ்.மீசாலையில் துயரசம்பவம்!

  யாழ். மீசாலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் புதள்கிpழமை ஏற்பட்ட தீ விபத்தால் பெறுமதியான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தினையடுத்து அப்பகுதிக்கான மின் விநியோகமும் ...

மேலும்..

அரசியல் கைதிகளுக்காகப் புலம்பெயர் அமைப்புகள் குரல் கொடுக்கவேண்டும்! குரலற்றவர்களின் குரல் கோமகன் தெரிவிப்பு

'அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்கவேண்டும்' என குரலற்றவர்களின் குரல்' அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - நீண்ட காலமாக சிறைகளில் ...

மேலும்..

கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தி. புலமைப்பரிசில் மாணவன் கௌரவிப்பு!

  கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையில் 7 வருடங்களுக்குப் பின்னர் தரம் - 5 புலமைப் பரிசிலில் அகிலன் ஆகாஷ் என்ற மாணவன் 175 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவனுக்கு பல்வேறு அமைப்புக்களின் உதவிக்கரத்தில் மிகப் பிரமாண்டமான கௌரவிப்பு ...

மேலும்..

வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!

'வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்' என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 'நாட்டில் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்து காணப்படும் ...

மேலும்..

அடுத்தவரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வாவே சமர்பிப்பாராம் சஜித் பிரேமதாஸ ஆரூடம்

அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதம் இடம்பெற்று வருகின்றது. இதில் அடுத்த ...

மேலும்..

விடைபெற்றுள்ளார் கோபால் பாக்லே!

இலங்கைக்கான முன்னாள்  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பிரியாவிடை பெற்றார். இதன்போது ' தனது பதவிக் காலம் முழுவதும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியமைக்காக பாக்லேவுக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் வெளிவிவகார ...

மேலும்..

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கு புதிய சட்டம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மீன்பிடிப் படகுகளில் பேட்டரி மோட்டார்கள் போன்ற எரிபொருள் மாற்று வழிமுறைகள் பயன்படுத்தப்படுவதால் மீனவர்களின் உற்பத்திச் ...

மேலும்..

மட்டக்களப்பில் சிறுகுற்றம் புரிந்தவர்களுக்கு விற்பனை நிலையம் திறந்து புனர்வாழ்வளிப்பு

மட்டக்களப்பில் சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை சீர்திருத்தி அவர்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த காரியாலயம் மட்டு.மாநகரசபையின் அனுசரணையுடன் நீதிமன்றத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த விற்பனை நிலையம் மட்டக்களப்பு ...

மேலும்..