இலங்கை செய்திகள்

ஜெரோம் பெர்னாண்டோவின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கோட்டை நீதிவான் முன்னிலையில் அவர் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் இரண்டாவது ...

மேலும்..

‘கெத்சமனே கொஸ்பல் சபையில்’ நத்தார் தினக் கொண்டாட்டம்!

நத்தார் தினத்தை முன்னிட்டு, கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதப் போதகர்களுக்கு அப்பளிப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு, மட்டக்குளியில் உள்ள கெத்சமனே கொஸ்பல் சபையில் நடைபெற்றது. ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகனின் ஆலோசனைக்கு அமைவாக இந்நிகழ்வு ...

மேலும்..

தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை! கல்முனை வட்டாரக்கிளை உறுப்பினர்கள் கருத்து

அண்மைக் காலமாக ஊடகங்களில் தமிழரசுக் கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப்  புறம்பானவை என இலங்கை தமிழரசுக் கட்சியின் கல்முனை வட்டாரக்கிளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது ...

மேலும்..

இயந்திர தகடுகளைத் திருடிய குற்றச்சாட்டில் பூசகர் கைது!

யாழ். ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தின் விக்கிரகங்களின் கீழிருந்த இயந்திரத் தகடுகளைத் திருடி விற்று வந்த குற்றச்சாட்டில்  பூசகர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பூசகர் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆலயத்தின் பூசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகம் ஏற்படாதவாறு ...

மேலும்..

வாளுடன் ஒருவர் புத்தூரில் கைது!

புத்தூர் சந்தியில் வாளுடன் நின்ற ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன், செவ்வாய்க்கிழமை இரவு காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பான தேடுதல் நடவடிக்கைக்காக சென்றுகொண்டிருந்தவேளை குறித்த சந்தேகநபர் புத்தூர் சந்தியில் ...

மேலும்..

இலங்கையுடனான தமது உறவுகளை மேம்படுத்த சிங்கப்பூர் பிரதமர் ஆர்வம்  

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து வலியுறுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் லீ சியன் லூங் கடிதம் எழுதியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அதில் ...

மேலும்..

மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள்! இரா. சாணக்கியன் வலியுறுத்தல்

மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாங்களை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களே குருக்கள்மட இராணுவ முகாம் பற்றி நாம் மாவட்ட ...

மேலும்..

கிளிநொச்சியில் சூரிய மின்சக்தி: ஒப்பந்தங்கள் மூடிமறைப்பாம்! அனுரகுமார போட்டுடைப்பு

கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்ளவது குறித்து முழுமையான விளக்கத்தை மக்களுக்கு வழங்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ...

மேலும்..

கிரிக்கெட் சபையை கலைக்க முடியாது! அமைச்சர் ஹரின் திட்டவட்டம்

நாடாளுமன்றில் வெளியிடப்படும் எதிர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்க முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாகக்  கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ - 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

மேலும்..

இராமநாதன் கல்லூரிக்கு குப்பை சேகரிக்கும் வாழிகள் சுன்னாகம் லயன்ஸால் வழங்கிவைப்பு!

  சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் டெங்கு விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் டெங்கு விழிப்புணர்வுக் ...

மேலும்..

வடக்கு எம்.பி.க்களுக்கு இந்தியத் தூதுவரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க தயார் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

இலங்கை  இந்திய மீனவர் பிரச்சினை தமிழகத்துடன் பேச்சு நடத்துவதே சிறந்தது. வட மாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களிடம் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் பேச முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

மதுபானசாலை காட்டி சுற்றுலா பயணிகளை கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது! வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் காட்டம்

வடக்கு கிழக்கில் சுற்றுலாவை விருத்தி செய்ய வேண்டுமானால் சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மதுபானத்தை காட்டி எங்கள் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகளைக் கொண்டுவர வேண்டிய தேவை இல்லை என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - ...

மேலும்..

எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பால் கடற்றொழிலாளர்பாதிப்புக்கு மாற்று திட்டம் அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

எரிபொருள் விலையேற்றத்தால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள உற்பத்தி செலவு அதிகரிப்பை சமாளிப்பதற்கு மாற்று திட்டம் ஒன்றை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், எரிபொருள் விலையேற்றத்தைச் சமாளிக்கும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு மானியங்கள் வழங்கப்படுவதை சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச ...

மேலும்..

மலையக மக்கள் குறித்து பேச்சு நடத்த அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழு விஜயம்

மலையகத் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி பேச்சு நடத்த இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி டிசைரி கோர்மியர் ஸ்மித் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் திங்கட்கிழமை முதல் 15 ஆம் ...

மேலும்..

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸாரின் அநீதி நிறுத்தப்பட வேண்டும்!  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து

கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பதிவு நடவடிக்கை நடந்து வருவதாகவும், இந்த அனைத்து பதிவு விவர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுகின்றன ...

மேலும்..